அப்பாவின் விமர்சனமேசிறந்த விருது: ஸ்ருதி

எனக்கு எந்த மொழியும் பேதமில்லை; எனக்குரியகதாபாத்திரம் பிடித்திருந்தால், அப்படங்களுக்குமுக்கியத்துவம் கொடுப்பேன்' என்கிறார், ஸ்ருதி ஹாசன்.'என் நடிப்பை பற்றி, பல தரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அதையெல்லாம் மூளையில் ஏற்றி, குழப்பிக் கொள்வதே இல்லை.

என்னை பொறுத்த வரை, என் தந்தை கமல்ஹாசன் விமர்சனத்தை பெரிதாக மதிக்கிறேன். அவரது விமர்சனம், ரொம்ப நேர்மையாக இருக்கும். என் நடிப்பு பற்றி அவர் தரும் விமர்சனம் ஒவ்வொன்றுமே, பெரியவிருதுக்கு சமமானது'என்கிறார், ஸ்ருதிஹாசன்.