ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு, வருத்தம் தெரிவித்து தமிழ் திரையுலகினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. சொத்து குவிப்பு வழக்கில், கடந்த செப்., 27ம் தேதி, பெங்களூரு தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தற்போது அவர் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் மவுன உண்ணாவிரத போராட்டம் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இன்று(செப்., 30ம் தேதி) நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர், பெப்சி, சின்னத்திரை, திரையரங்கு உரிமையாளர் சங்கம், பி.ஆர்.ஓ., உள்ளிட்ட சங்கங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி காலை 9.00 மணிக்கு துவங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5.00 மணி வரை நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒருசிலர் மட்டுமே பங்கேற்றனர். பின்னர், மாலை 5மணிக்கு மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், சூர்யா, விக்ரம், பாலா, கார்த்தி, விமல், பரத், விஜய் சேதுபதி, நரேன், ஸ்ரீகாந்த், பிரபு, விக்ரம் பிரபு, சிபிராஜ், டி.சிவா, கலைப்புலி தாணு, ராமராஜன், குண்டு கல்யாணம், இப்ராஹிம் ராவுத்தர், ஏ.எல்.அழகப்பன், எஸ்.ஏ.சந்திரசேகர், தேவா, கே.பாக்யராஜ், பெப்சி விஜயன், எஸ்.ஜே.சூர்யா, எம்.எஸ்.பாஸ்கர், கலைப்புலி சேகரன், நிழல்கள் ரவி, அஜய் ரத்னம், ரமேஷ் கண்ணா, பிரவீன் காந்தி, ஜாக்குவார் தங்கம், வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, சிவகார்த்திகேயன், சூரி, வையாபுரி, மன்சூர் அலிகான், செந்தில், சித்ரா லட்சுமணன், சங்கர் கணேஷ், ஆர்.வி.உதயகுமார், சிங்கமுத்து, அனு மோகன், அபிராமி ராமநாதன், முக்தா சீனிவாசன், கல்யாண், தரணி, குட்டி பத்மினி, பி.வாசு, தியாகு, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட ஒரு சில திரை நட்சத்திரங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
முன்னணி நடிகர்-நடிகைகள் பங்கேற்வில்லை
உண்ணாவிரதத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட யாரும் பங்கேற்வில்லை. சூர்யாவாவது ஒரு 10 நிமிடம் இருந்துவிட்டு சென்றார். ஆனால் இவர்கள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. உண்ணாவிரதத்தில் சூர்யா, கார்த்தி, விமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒருசிலராவது பங்கேற்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்தமட்டில் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, சி.ஆர்.சரஸ்வதி, நளினி, குட்டி பத்மினி போன்ற பழம்பெரும் நடிகைகள் தான் பங்கேற்றனர். இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா, காஜல் அகர்வால், சமந்தா, ப்ரியா ஆனந்த், ஓவியா, அமலா பால், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட ஒருத்தரும் பங்கேற்கவில்லை.
படப்பிடிப்புகள் ரத்து
உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு படப்பிடிப்பு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இன்று எந்த ஒரு படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
தியேட்டரில் காட்சிகள் ரத்து
இந்த உண்ணாவிரத போராட்டாத்திற்கு தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து அவர்களும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.