அந்நியனைத் தொடர்ந்து மீண்டும் விக்ரமுடன் ஷங்கர் இணைந்துள்ள படம் ஐ. இந்த படத்தின் தலைப்பினை அவர்கள் வெளியிட்டபோது, ஆங்கிலத்தில் நான் என்பதைத்தான் தமிழில் ஐ என்று கூறுகிறார்கள் போலும் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், இப்போது விக்ரம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஐ என்றால் அழகு என்று அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாடலிங் உலகத்தில் நடக்கும் பிரச்சினைகள். ஒரு மாடலுக்கு உள்ள பிரச்சினைகள் என மாடலிங் உலகம் பற்றியே இந்த படம் பேசும். குறிப்பாக விளம்பர படங்களில் நடிக்கும் ஒரு மாடல் தனது உடல்கட்டை பேணிப் பாதுகாக்க என்னென்ன சிரத்தைகள் எடுக்கிறான் என்பதையும இந்த படம் ஆழமாக சொல்லும். அதில் அவனது உழைப்பும், வேதனைகளும் வெளிப்படும்.
அதோடு, அந்நியன் படத்தில் ரோபோ, அம்பி, அந்நியன் என மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்த நான், இந்த ஐ படத்திலும் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் ஏற்ப எனது உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என உடலை வருத்தி நடித்திருக்கிறேன். எனது கடின உழைப்பு படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் விக்ரம்.

cinema,vikram, i, shankar