குத்து சண்டை பயிற்சியில் ஆர்வம் காட்டும் அஜீத்

சினிமாவில் நடிப்பதற்கு முன்பிருந்தே பைக் ரேஸ், கார் ரேஸில் தீவிர ஆர்வம் காட்டி வந்தவர், அஜீத். ஒரு கட்டத்தில், சினிமாவில் பிசியான போதும், அவ்வப்போது பந்தயங்களில் கலந்து கொண்டு வந்தார், அஜீத்.அதன் காரணமாக, பலமுறை விபத்துகளையும் சந்தித்தார்.

இதனால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு தடை, தாமதம் ஏற்பட்டதால், சமீபகாலமாய் பந்தயங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்ட அஜீத், அவ்வப்போது, தன் 'டு காட்டி' பைக்கில், சென்னைக்கு அருகாமையில் படப்பிடிப்பு நடந்தால், விசிட் அடித்து பைக் ஓட்டும் ஆசையை தீர்த்துக்கொள்கிறார்.
தற்போது, அஜீத்துக்கு 'பாக்ஸிங்' பயிற்சியில் ஆர்வம் திரும்பியுள்ளதாம். பைக் ரேஸை போன்று, உடம்புக்கு பெரிய அளவில் சேதாராம் ஏற்படுத்தும் விளையாட்டு அல்ல என்பதால், ரேஸை விட, பாக்ஸிங்தான் பாதுகாப்பு என்று, இப்போது பாக்ஸிங் பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார், அஜீத்.