சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக சென்னையை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான ஆந்திராவுக்கே ஓட்டம் பிடித்தார் அஞ்சலி. அதனால் சேட்டை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தவர், சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது ஜெயம்ரவியுடன் சுராஜ் இயக்கி வரும் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் தெலுங்கு, கன்னடத்தில் புதிய படங்கள் இருப்பதால் முன்பு மாதிரி சென்னையில் அவர் முகாம் போடவில்லை. ஆந்திராவில புதிய பங்களா வாங்கி அங்கேயே செட்டிலாகி விட்டார். தமிழ் படப்பிடிப்பு என்றால் தயாரிப்பாளர் செலவில் ஹோட்டலில் தங்கி விட்டு திரும்பி விடுகிறார்.
இந்த நேரத்தில், சமீபகாலமாக அஞ்சலிக்கு நிறைய மர்ம போன் கால்கள் வருகிறதாம். எதிர்முனையில் பேசுபவர் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கிறார்களாம். சில நேரங்களில் அவர்கள் பேசுவதே இல்லையாம். இப்படி அடிக்கடி நிகழ்கிறதாம்.
ஆனால் அந்த போன் நம்பர் யாருடையது என்று அஞ்சலிதரப்பில் சேர்ச் பண்ணினால் அது பப்ளிக் போனாக இருக்கிறதாம். இதன்காரணமாக, தற்போது தனது போன் நம்பரை ரகசியமாக வைத்திருக்கிறார் அஞ்சலி. சில முக்கியத்துவம் வாய்ந்த டைரக்டர், பட அதிபர்களிடம் மட்டுமே தன் நம்பரை கொடுத்திருப்பவர், வேறு யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்.

cinema, anjali, jayam ravi