2002ல் நம்மை என்றொரு மலையாள படத்தில் அறிமுகமானவர் பாவனா. அதையடுத்து மூன்றே வருடங்களில் 20 மலையாள படங்களில் நடித்த அவர், பின்னர் தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு வெயில், தீபாவளி, ஜெயங்கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்தார்.
ஆனால், அசல் படத்தில் அஜீத்துடன் நடித்ததால் அதையடுத்து பாவனாவின் மார்க்கெட் எகிறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தோடு அவரது கோலிவுட் மார்க்கெட் காலியாகி விட்டது. அதனால் மலையாளம், தெலுங்கில் சில ஆண்டுகளாக நடித்து வருகிறார் பாவனா. இந்த நிலையில், மலையாள நடிகர் அனூப் மேனனும், பாவனாவும் காதலித்து வருவதாக கடந்த ஓராண்டாகவே மலையாள திரையுலகில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. அதோடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
ஆனால், தற்போது நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ள அனூப் மேனன், கண்டிப்பாக எனது வருங்கால மனைவி சினிமா உலகை சார்ந்தவராக இருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மீடியாக்கள், பாவனா-அனூப்மேனன் காதல் கதை என்னாயிற்று? என்று விசாரித்தபோது, சில மாதங்களாக அடிக்கடி சந்தித்து மனம் விட்டு பேசி வந்த அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும் தகவல் கிடைத்துள்ளதாம். அதன் காரணமாகவே, தனது வருங்கால மனைவி பாவனா இல்லை என்று இந்த அவசர செய்தியை வெளியிட்டுள்ளாராம் அனூப்மேனன்.