நவீன சல்வார் வகைகள்.

சுடிதார் என்றால் ஒரு டாப்பும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ‌ஸ்‌லீ‌ப் லெ‌ஸ் (கை‌யி‌ல் இல்டலாத டா‌ப்‌ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துகின்றன சுடிதார்களில்.

கண் கவரும் கலர்ஃபுல் காம்பினேஷனில் அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய அனார்கலி ஃபிட்டிங் சல்வார் இது!
கைப்பகுதியில்  செய்யப்பட்டிருக்கும் நெட் மற்றும் லேஸ் வொர்க் அணிந்ததுமே ரிச் லுக் தரும். கையில் பார்டர், கல் வேலைப்பாடுகள் இருப்பது கூடுதல் அழகு! இந்த  உடையை பல மடங்கு எடுப்பாகக் காட்டுவது நுட்ப வேலைப்பாடுகள் கொண்ட துப்பட்டாதான். ஃப்ராக் போன்ற தோற்றத்தைத் தரும் இந்த சல்வார்  எல்லா விசேஷங்களுக்கும் சரியான சாய்ஸ். கண்ணை உறுத்தாத கலை வண்ணம்.

எம்ப்ராய்டரி, நெட் வேலைப்பாடுகள் பார்த்துப் பார்த்து செய்யப்பட்ட கிராண்ட் லுக் சல்வார் இது! பெயர் - ‘டபாங்’. பனாரஸ் மெட்டீரியலில் ஸ்லீவ்  இணைக்கப்பட்டிருப்பதால் வித்தியாசமாக இருக்கும்.  பலவண்ண பளிச் கலவையில் அமைந்திருப்பதால் இதற்கு மேட்சாக எந்த நகையையும் அணிந்து  கொள்ளலாம். உயரமான பெண்களுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் வகையில் டாப்ஸில் பிரில் வொர்க். வெல்வெட் பார்டரில் சிவப்பு, வெள்ளை,  ரோஜா நிறப் பூக்களை வரிசையாகப் பதித்தது போல வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டா கொள்ளை அழகு.
சிம்பிளான சில்க் காட்டன் மெட்டீரியல் சல்வார் இது! மஞ்சள், சிவப்பு, பச்சை என கான்ட்ராஸ்ட் கலர்களில் இருப்பது இதன் ஸ்பெஷாலிட்டி! பல  வண்ணங்களில் கிடைக்கும் இந்த சல்வார் சிம்பிளான டிரெஸ் விரும்புபவர்களுக்கானது. எளிமை என்றென்றும் அழகே!

லேஸ் வேலைப்பாடுகள் நிறைந்த, சிம்பிள் லுக் தரும், சில்க் காட்டன் சல்வார் இது! வண்ணமயமான இந்த சல்வாரில் வெண்மை லேஸ் வொர்க்  செய்து பார்டராக இணைத்திருக்கிறார்கள். சல்வாரின் முதுகுப்பகுதியில் எம்ப்ராய்டரி வேலைப்பாடு அட்டகாசம்! காலர் டைப்பாக இருப்பதால் டீசன்ட்  தோற்றம். மயக்கும் வண்ணத்தில் மட்டில்லா மரியாதை!க்யூட் பெண்களுக்கான சரியான சாய்ஸ் சல்வார் இது! வெள்ளை, பச்சை, சிவப்பு, கருப்பு என எல்லா வண்ணங்களையும் கலந்து கட்டி  அணிவகுக்கிறது. இப்போதையை டிரெண்ட்டுக்கு ஏற்ற பஃப் கை எக்ஸ்ட்ரா அழகு. க்ரஷ் மெட்டீரியல் துப்பட்டா, கேதரிங் பாட்டம் என ஒவ்வொன்றும்  துல்லியமான அழகு. மாடர்ன் மங்கைகளுக்கான மகத்தான ரகம்!

எத்தனை நிறங்களில், எத்தனை டிசைன்களில் சல்வார் வகைகள் வந்தாலும் காலேஜ் பெண்களின் சாய்ஸ் மிக்ஸ் அண்ட் மேட்ச் வகைகள்தான்.  அதிலும் விதவிதமான டாப்ஸ் வகைகளை எடுத்துக் கொண்டு அதற்கேற்ற லெகிங்ஸ் அணிவது பெண்களுக்கு ஃபேவரைட். அப்படிப்பட்ட கலர்ஃபுல்  டாப்ஸ், அதற்கேற்ற லெகிங்ஸ் இது! அற்புத டிசைனில் அசத்தல் ரகம்!
விருந்துகள், விசேஷங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்ற லாட்சா டிரெஸ் இது! ‘காக்ரா’ மாதிரியே தோற்றம் தரும் இந்த உடையில் சிறிய  மாற்றங்களைச் செய்து புதிதாகக் களமிறக்கியிருக்கிறார்கள். பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டோன், நெட், ஜமிக்கி வேலைப்பாடுகள் இருப்பதால்  கொஞ்சம் வெயிட். சிம்பிள் நகைகளை அணிந்தாலே போதுமானது. புதுமை விரும்பிகளுக்கான புதிய ரகம்!

மென்மை வண்ணத்தில் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட காட்டன் அனார்கலி சல்வார் இது! லைட் கலர்களில் கிடைக்கிறது. கேதரிங்  பாட்டம் இருப்பதால் ரிச் லுக் கிடைக்கும். ஃபங்ஷன்களில் ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ நீங்கள்தான். இதமான வண்ணத்தில் இனிமை!