இலவசமாக நடிக்க தயார் 'களவாணி' ஓவியா அறிவிப்பு!..

'களவாணி' ஓவியா, தன் மனதுக்கு பிடித்தது போன்ற வேடங்கள் இன்னும் கிடைக்கவில்லை என, ரொம்பவே கவலைப்படுகிறார். சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கிடைக்கிற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

மேலும், 'ரசித்து நடிக்கக்கூடிய ரசனையான வேடங்கள், எனக்கு கிடைத்தால், பணம் ஒரு பொருட்டே இல்லை. அந்த மாதிரி வேடம் எனக்கு யார் கொடுத்தாலும், அந்த படத்தில் பணமே வாங்காமல் இலவசமாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்' என,அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்பும், அவரின் மனதுக்கு பிடித்த வேடங்கள் கிடைக்கவில்லை என்றால், கஷ்டம் தான்.