பாலாவிடம் சான்ஸ் கேட்டு துரத்தும் பூஜா!

2003ல் டைரக்டர் சரண் இயக்கிய ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல் என வரிசையாக நடித்த பூஜா, பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்திருந்தார்.

அவரது நடிப்பும் பேசப்பட்டது.
இருப்பினும், அதன்பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாததால் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விடியும்முன், கடவுள் பாதி மிருகம் பாதி ஆகிய படங்கள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தி கோலிவுட்டின் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக, சில மேடைகளில் நடிகர் ஆர்யா, டைரக்டர் பாலா ஆகியோருக்கு முத்தம் கொடுத்து அதை மீடியாக்களில் ப்ளாஷ் செய்ய வைத்தார்.

மீண்டும் பூஜா நடிக்க வந்திருக்கும் செய்தி பரவி விட்டபோதும், அவருக்கு யாருமே சான்ஸ் கொடுக்க முன்வரவில்லை. அதனால் தற்போது சசிகுமார்- வரலட்சுமி நடிப்பில் தாரைதப்பட்டை படத்தை டைரக்டர் பாலா இயக்கி வருவதால், அந்த படத்தில் தனக்கு ஏதாவது கேரக்டர் கொடுக்குமாறு அவரை துரத்தி வருகிறாராம் பூஜா. ஆனால் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும்போதே படத்தின் கேரக்டர்களை முடிவு செய்து விடும் பாலா இன்னமும் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லையாம்.