இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ், முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வரிசையில், இப்போது டைரக்டர் சுசீந்திரனும் வெண்ணிலா கபடி டீம் புரொடக்சன் என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
அதனால் தற்போது தான் இயக்கியுள்ள ஜீவா படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி, ஆர்யாவின் ஷோ பீப்புள் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ஆகிய நிறுவனங்களுடன் தனது வெண்ணிலா கபடி டீம் புரொடக்சனையும் இணைத்து தயாரித்திருக்கிறார்.
அவரது முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த விஷ்ணுவே இந்த ஜீவா படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த படத்தில் கபடி விளையாட்டு, இந்த படத்தில் கிரிக்கெட் விளையாட்டு. இதுதான் வித்தியாசம்.
மேலும்,ஜீவா படத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா, ஹாக்கியை மையமாக வைத்து வெளியான சக்தே இந்தியா படம் போல். இப்படம் கிரிக்கெட்டை தழுவி அதே பாணியில் உருவாகியிருக்கிறது என்கிறார். அதையடுத்து, சக்தே இந்தியா படத்தை காப்பியடித்துதான் ஜீவா படம் உருவாகியிருப்பதாக செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இதுபற்றி சுசீந்திரனிடம் கேட்டால், அவர் சொல்லும் பதில் என்ன தெரியுமா? விளையாட்டை மையமாகக்கொண்ட கதைகள் என்றாலே எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனால் அதை காப்பி என்றெல்லாம் சொல்லக்கூடாது என்கிறார்.

cinema,suseendran, jeeva, arya, vishnu, lingusami, shankar, murugadoss, vishal