பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கும் படம் லை ஓ லைலா. இதில் மோகன்லால், அமலா பால் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரம்யா நம்பீசன். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜோஷி சாரின் படத்தில் நடிக்க எல்லோருக்குமே ஆசை இருக்கும்.
லைலா ஓ லைலா கதை எனக்குத் தெரியும். கதையின் திருப்புமுனையாக ஒரு கேரக்டர் வரும். அந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதிர்பாராத வகையில் எனக்கே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. தமிழில் நான் நடித்த ரெண்டாவது படம் ரிலீசாக இருக்கிறது. நான்கு போலீசும் நல்லா இருந்த ஊரும், முறியடி படங்களில் நடித்து வருகிறேன். இதுதவிர கன்னடத்தில் ஸ்டைல் கிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறேன். என்கிறார் ரம்யா நம்பீசன்.