கோடம்பாக்கத்துக்கு லேட்டஸ்டாக இறக்குமதியான நடிகைகளில் லட்சுமிமேனனுக்கு பிறகு எந்த நடிகையும் பெரிய அளவில் வளரவில்லை. எதிர்பார்க்கப்பட்ட நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிப்புக்கு கல்தா கொடுத்து விட்டார்.
இதன்காரணமாக, பத்து வருடங்களாக கோலேச்சி கொண்டிருக்கும் த்ரிஷா, நயன்தாரா, காஜல்அகர்வால் போன்ற சில முத்தின நடிகைகள்தான் தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். இதில் நயன்தாரா, காஜல் இருவரும் சம்பள விவகாரத்தில் இன்னமும் பழைய ஞாபகத்தில் உச்சத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் த்ரிஷாவோ, அடக்கி வாசிக்கிறார். தற்போது கைவசம் அஜீத்தின் 55வது படம், சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படம், தவிர புனித் ராஜ்குமாருடன் ஒரு கன்னட படம் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், பத்து வருடஙகளுக்கு பிறகு இன்னமும் தனக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைப்பதே பெரிய விசயம் என்பதை உணர்ந்திருப்பவர், காஜல்அகர்வால், நயன்தாராவைப்போன்று கெடுபிடி செய்யாமல், தயாரிப்பாளர்களின் நிலை அறிந்து சம்பளத்தை வாங்கிக்கொள்கிறார்.
த்ரிஷாவின் இந்த அணுசரணையான போக்கு காரணமாக, இன்னும் சில படங்களில நடிப்பதற்கும் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆக மார்க்கெட்டில் எந்தவித சலசலப்பும இல்லாமல் சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகிறார் த்ரிஷா.

cinema, nayanthara, trisha, lakshmi menon, kajal agarwal, ajith, jayam ravi, nashriya