பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே அப்படத்துககு இசை ஏ.ஆர.ரகுமான்தான் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு அர்ஜூனைக்கொண்டு இயக்கிய தனது முதல் படமான ஜென்டில்மேன் படத்திலிருந்தே ரகுமானுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுத்துள்ளார் ஷங்கர். விஜய் நடித்த நண்பன் படத்திற்கு மட்டுமே அவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் சென்றார். அதற்கு காரணம், ரகுமான் ஹாலிவுட் பட வேலைகளில் பிசியாக இருந்ததுதான்.
இந்த நிலையில், தற்போது விக்ரமைக்கொண்டு ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்திற்கும் எப்போதும் போலவே அதிகமாக மெனக்கெட்டு பாடல்களை கொடுத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான். மேலும், சீனாவில் அதிக நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சீனாவில்தான் படமாக்கப்பட்டுள்ளதாம்.
அதில் விக்ரம் ஒரு பாடலில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றி அசத்துகிறாராம். காட்சிக்கு காட்சி, ஷாட்டுக்கு ஷாட்டு தனது கெட்டப்பை எப்படி வேணடுமானாலும் மாற்றி நடிக்க முடியும் என்பதை ஏற்கனவே பல படங்களில் ப்ரூப் பண்ணி விட்ட விக்ரம், இந்த படத்தில் இன்னும் ஜாஸ்தியாக கலக்கல் செய்திருக்கிறாராம்.
அப்படி ஒரு அவர் தோன்றும் ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியிருக்கிறாராம். அந்த பாடலின் சூழல் தன்னை மிகவும் கவர்ந்ததால், அந்த டியூனை அதிக ஈடுபாட்டுடன் உருவாக்கிய ரகுமான், அந்த பாடலை நான்தான் பாடுவேன் என்று விரும்பி பாடினாராம்.

cinema, a.r.rahman, vikram, harish jayaraj, i, vijai,gentlemen, shankar,play back,