அதிக கோபத்தின் பாதக விளைவுகள்.

மனித உடலின் கல்லீரல் தன் வேலையை செய்தால்தான் மற்ற உறுப்புகள் சீராக இயங்கும்.இது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான சக்தியை பெற உதவும். ரத்தத்தை சேமித்து வைத்து உடல் உழைப்பின் போது தேவையான பகுதிகளுக்கு அனுப்பி தசை நார்களுக்கும் தசைகளுக்கும் ஊட்டமளிக்கிறது.

கல்லீரலின் சக்தி பாதிக்கப்பட்டால் தசை நாண்கள் நீட்டி மடக்குதல்,சுருங்கி விரிதலில் தொய்வு ஏற்பட்டு உடலின் எலும்பு கூட்டமைப்பில் வலி மற்றும் நோய்கள் ஏற்படுகிறது.

சரும பாதிப்புகள், கண்பார்வை கோளாறுகள், விரல் நகங்களில் கோளாறுகளுக்கு கல்லீரலின் குறைபாடுகளே காரணமமாகும்.
அதிக கோபம், மன இறுக்கம், போதிய உறக்கமின்மை, அதிக உடல் உழைப்பு, மது அருந்துதல், போதை பொருட்கள், கொழுப்பு உணவுகள் கல்லீரலை பாதிக்கிறது. இதனால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், முரட்டுதனம், ஒற்றை தலைவலி, கடுஞ்சொற்கள், இருதய நோய்கள், மஞ்சள் காமாலை, பக்கவாதம், கிறுகிறுப்பு, வயிற்று வலி, புளித்த ஏப்பம், போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரணமாக உள்ளன.

இந்த பிரச்சனைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியே தொடங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் தொடங்குவது நல்லது.