ரஜினி, கமல், விஜய், அஜீத் என தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ரம்பா. 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கனடாவில் செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில், ரம்பாவின் அண்ணன் சீனிவாஸின் மனைவி பல்லவி, தனது கணவர் சீனிவாஸ், அவரது சகோதரி ரம்பா மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மனைவியின் புகார் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சீனிவாஸ் கூறியதாவது, சில மாதங்களுக்கு முன்பு நான் கனடா சென்றுவிட்டு சில வாரங்கள் கழித்து இந்தியா திரும்பினேன். வீட்டிற்கு வந்ததும், ரம்பாவின் வைரம் உள்ளிட்ட பல நகைகள் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. எனது மனைவி பல்லவி தான் அந்த நகைகளை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊரான ஐதராபாத்திற்கு சென்ற தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தேன். இதுப்பற்றி பல்லவியிடம் கேட்டால் அதற்கு சரியான பதில் தராமல், இப்போது என் மீதும், என் தங்கை உள்ளிட்ட எனது குடும்பதார் மீதும் இப்படி ஒரு பழியை சுமத்தி உள்ளார். இதற்கும், ரம்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தேவையில்லாமல் அவரது பெயரை இழுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.