மடிசார் அணியும் பெண்ணுக்கான அலங்காரம்.

மடிசார் அணிகிற பெண்கள் கால்களுக்கான நகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர்  இன வழக்கப்படி முகூர்த்தத்துக்கு நூல் புடவை அணிவது வழக்கம்.  அந்த நூல் புடவைக்கு கெம்ப் செட்தான் அல்லது கல் வைத்த செட் பொருத்தம். கொலுசும் மெட்டியும் அவர்களது கால்களின் அளவு மற்றும்  வடிவத்துக்குப் பொருந்துகிற மாதிரி இருக்க வேண்டும்.
சில்வர் கலரில் ஒர்க் செய்த  புடவைகளுக்கு ஒயிட் கோல்டில் அல்லது பிளாட்டினம் நகைகளைத் தேர்வு செய்யலாம்.ஆடம்பர வேலைப்பாடு செய்த புடவைகளுக்கு ஆரம் அணியக்கூடாது.ஏற்கனவே சேலையில் உள்ள அதிகமான வேலைப்பாடு, நகையின் அழகைக்  கெடுத்துவிடும். எனவே, சோக்கர் செட் அல்லது கல் வைத்த சிம்பிளான கழுத்தணியுடன் நிறுத்திக் கொள்ளலாம்.
மணப்பெண்கள் தவிர்க்கக் கூடாத ஒன்று வளையல்.கல் வைத்த குஜராத்தி வளையல்களுக்குத்தான் இன்று மவுசு அதிகம். எல்லா கலர்களிலும்  கிடைப்பதால் எப்படிப்பட்ட காம்பினேஷனிலும் அணிய முடியும். சேலையின் உடல் கலர் பிரதானமாக இருக்கும்படியும் பார்டர் கலர் கம்மியாக  இருக்கும்படியும் மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து அணியலாம்.
காதணி வரிசையில் முகூர்த்தத்துக்கு பெரிய பெரிய ஜிமிக்கிதான் இன்று ஃபேஷன். போல்கி ஸ்டோன் வைத்த ஜிமிக்கி அழகு. பெரிய அளவான  கோல்டன் ஜிமிக்கிகள் எந்த கலர் பட்டுச் சேலைக்கும் மிகவும் பொருந்தும். அதுவே ரிசப்ஷனுக்கு பூ  டிசைன், அகலமான மயில் டிசைன் வைத்தது, பெரிய வளையத்தில் முத்து கோர்த்தது போன்றவை அழகு. சில சமூகத்தினரின் திருமணங்களில் விளையாடல்என்றொரு சடங்கு நடக்கும்.

அதில் நீளமான ஒரு சங்கிலி, அதற்கு மேட்ச்சாக ஒரு சிம்பிள் நெக்லஸ், அதே டிசைனில் ஜிமிக்கி, தோடு, எடுப்பாக இருக்கும். வட இந்தியர்களின்  கலாசாரமாக இருந்த மெஹந்தி செரிமனி, இன்று எல்லாத்திருமணங்களிலும் ஒரு ஃபேஷனாகி விட்டது. மெஹந்தி சடங்கில் மணப்பெண்ணுக்கு  ஆடம்பர நகைகள் தேவையிருக்காது. காதணிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, சற்றே பெரிதாக, ஆடம்பரமாக அணிவதுதான் ஃபேஷன்.