படப்பிடிப்பின் இடையில் நடிகையை காணவில்லை!.......

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.இந்தப் படம் மலையாளத்தில் மெடுலா ஓப்லன்கட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தமிழில் காயத்ரி நடித்த கதாபாத்திரத்தில் ஆவானா நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை புதுச்சேரியில் சென்று சமீபத்தில் படமாக்கியுள்ளது படக்குழு.
புதுச்சேரி படப்பிடிப்பிற்கு கிளம்புவதற்கு முன்பு ஆவானா தான் சென்னைக்கு போக வேண்டும் என்று படக்குழுவிடம் லீவு கேட்டிருக்கிறார்.

க்ளைமேக்ஸ் காட்சி என்பதால் லீவு தர மறுத்த படக்குழு அவரை புதுச்சேரியில் ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆவானாவோ யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டாராம்.
இதையடுத்து ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்து ஆவானாக்கு பதிலாக ஜாஸ்மின் என்ற மும்பை நடிகையை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை முடித்தார்களாம். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டமாம். எனவே, ஆவானா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.