சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொருவருக்குமே ஒரு ரோல் மாடல் இருப்பார்கள். அவர்கள் ஏற்படுத்திய பாதிப்புதான் இவர்கள் நடிகர் – நடிகையாகியிருப்பார்கள். அதோடு, இந்த மாதிரி ஒரு நடிகராகத்தான் நாம் வர வேண்டும் என்ற வெறியுடன்தான் சினிமாவில் என்ட்ரியும் ஆகியிருப்பார்கள்.
இதுபற்றி அனுஷ்கா கூறுகையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது சின்ன வயது கனவெல்லாம் கிடையாது. யோகா மாஸ்டரான நான், நாகார்ஜூனாவுக்கு யோகா சொல்லிக்கொடுக்க போனபோதுதான் அவர் என்னை நடிக்க அழைத்தார்.
அதன்பிறகுதான் நடிப்பைப்பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு அரிதாரம் பூசினேன். அதனால், எனக்குள் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இந்த நடிகை மாதிரி வர வேண்டும், அந்த நடிகை மாதிரி வர வேண்டும் என்ற எந்தவித கனவும் இருந்ததில்லை. திடீரென்று நடிகையானதால், அப்போது நடிகையாக இருந்த சிம்ரன், ஜோதிகா உள்ளிட்ட நடிகைகளை என் மானசீக குருக்களாக ஏற்று நடிக்கத் தொடங்கினேன்.
அவர்கள் நடித்த படங்கள் திரும்பத்திரும்ப போட்டுப்பார்த்துதான் நான் நடிப்பை கற்றுக்கொண்டேன். அதன்பிறகுதான் எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கினேன். அதனால், எனக்குள் சிம்ரன்-ஜோதிகா இருவரையும் கலந்த நடிப்புதான் வெளிப்படும். அதை நான் பெருமையாகவே கருதுகிறேன் என்கிறார் அனுஷ்கா.