மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கி இருந்தார். அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னடத்தில், பி.வாசு இயக்கினார், அங்கும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதன் தமிழ் ரீமேக்கை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்குகிறார். மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிக்கிறார்.
மீனா நடித்த கேரக்டருக்கு இன்னும் நடிகை யார் என்று உறுதி செய்யப்படவில்லை. அனேகமாக கவுதமியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை நா.முத்துகுமார் எழுதுகிறார்.
ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, ஒயிட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இதன் பூஜை சமீபத்தில் நடந்தது. வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.