ஸெர்கான் நகைகள்.
இவை அசல் வைரக்
கற்களைப் போலவே மின்னக்கூடியவை. வைரம்
வாங்குவதென்றால் ஒரு கேரட் 60 ஆயிரம் ரூபாய்.
அதுவே செயற்கையானது என்றால் வெறும் 3 ஆயிரத்தில் வாங்கலாம். வெஸ்டர்ன்
முதல் பாரம்பரிய பட்டு வரை எல்லா உடைகளுக்கும் அம்சமாகப் பொருந்தும்.
பிளெயின் கோல்ட்.
இது தங்கப்
பிரியர்களுக்கானது. தங்கம் மாதிரியே இருக்க வேண்டும்.
ஆனால், கவரிங் விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பவர்களுக்கானது. மணப்பெண்களுக்கான முழு செட், ஜிமிக்கி, நெக்லஸ், வளையல், செயின், பிரேஸ்லெட், கொலுசு என தங்கத்தில் என்னவெல்லாம் கிடைக்குமோ அத்தனையும் இதிலும் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கவரிங் விலையில்.
ஆனால், கவரிங் விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பவர்களுக்கானது. மணப்பெண்களுக்கான முழு செட், ஜிமிக்கி, நெக்லஸ், வளையல், செயின், பிரேஸ்லெட், கொலுசு என தங்கத்தில் என்னவெல்லாம் கிடைக்குமோ அத்தனையும் இதிலும் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கவரிங் விலையில்.
பிளாட்டினம்
பிளேட்டட்.
பிளாட்டினம் மிகவும்
விலை கூடியது ஆகையால் செல்வந்தர்களால் மட்டுமே வாங்கி அணிய முடியும். ஆசைக்கு ஒரு
மோதிரம் கூட வாங்க கஷ்டம்.ஆனால் செயற்கையாக
வருகிற பிளாட்டினம் பிளேட்டட் நகைகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். வகைக்கொன்றாக வாங்கி, அணிந்து மகிழலாம். வெஸ்டர்ன் உடைகளுக்கு
அட்டகாசமாகப் பொருந்தக்கூடிய இதில், சின்ன செயின், பென்டென்ட், நெக்லஸ், காதணிகள், பிரேஸ்லெட் என எல்லாமே கிடைக்கின்றன. விலை 2,500 ரூபாயிலிருந்து ஆரம்பம்.
ஆன்ட்டிக்.
பழமையின் பெருமை
பேசுகிற ஆன்ட்டிக் நகைகளுக்கு இப்போது தனி மவுசு. ஆன்ட்டிக் நகைகளின் விலையும்
சாதாரண மக்கள் யோசிக்க முடியாதது. தங்கம்,
வெள்ளியில் பெரும்பாலும்,
கேஸ்ட்டிங் எனப்படுகிற
முறையில் உருவாக்கப்படுகின்றன ஆன்ட்டிக் நகைகள். அதே ஃபினிஷிங்கில், அதே
அழகில், முழுக்க முழுக்க
கைகளால் வடிவமைக்கப்பட்ட ஆன்ட்டிக் நகைகள் செயற்கை உலோகங்களில் கிடைக்கின்றன.
பட்டுப் புடவைக்குப் பாந்தமாக இருக்கும்.
ஆயிரங்களில் இருந்து ஆரம்பிக்கிறது விலை.
கெம்ப் ஸ்டோன்
நகைகள்.
அதிக
பளபளப்பில்லாத, மேட்
ஃபினிஷிங்கில் பச்சையும், சிவப்புமான
கற்கள் பதித்த கெம்ப் செட் நகைகளுக்கு இன்று எக்கச்சக்க வரவேற்பு. ஒரிஜினல் கெம்ப் நகை என்றால், ஒரு ஜோடி ஜிமிக்கியே 75 ஆயிரம் ரூபாய். அதையே விலை மலிவாக 1,200 ரூபாயில் வாங்கலாம். காதணி, நெக்லஸ் என
எல்லாம் உண்டு.
பீடட் நகைகள்.
ரூபி, எமரால்ட், அமெதிஸ்ட் என விலை உயர்ந்த கற்களைக் கொண்டு
வடிவமைக்கப்படுகிற அனைத்து நகைகளும் செயற்கையாகவும் கிடைக்கின்றன. ஒரிஜினல் கற்கள் மற்றும் மணிகள்
என்றால் சில பல லட்சங்களை வைத்தாக வேண்டும். ஒரிஜினலாக கிடைக்கிற அத்தனை கற்களின் கலர்களிலும் பளபளப்பிலும்
செயற்கையாகவும் உருவாக்க முடியும். விலை சில ஆயிரங்கள் மட்டுமே.
கல்ச்சர்டு
முத்து மற்றும் ஸ்டோன் நகைகள்.
பிளாஸ்டிக்
கலப்பில்லாத முத்து மற்றும் ஸ்டோன்ஸ் கொண்டு தயாராகிற இந்த நகைகள், அழகில் அசல் முத்து, கல் நகைகளை மிஞ்சும். ஜிமிக்கி, வளையல், நெக்லஸ், முகப்பு வைத்த செயின் என எல்லாம் செய்யலாம்.
வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ற வடிவத்தில், நிறத்தில், எத்தனை சரம்
வேண்டுமானாலும் வைத்துச் செய்யலாம். பட்ஜெட் பர்ஸை பதம் பார்க்காது.