100 கிராம் கொய்யாப் பழத்தில் நார்ப்பொருள் 5.40 கிராம், கொழுப்பு 0.30 கிராம், புரதம் 1 கிராம், மாவுப்பொருள் 11.6 கிராம், கால்சியம் 10 மில்லிகிராம், பான் பிரஸ் 28 மி.கி. இரும்புச் சத்து 104 ;மி வைட்டமின் ‘‘சி’’ 232 மி.கி. என்ற அளவிலும், வைட்டமின் ‘‘ஏ’’, வைட்டமின் ‘‘பி’’ சத்துக்களும், பெக்டினும் கணிசமாக உள்ளன.
வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தைவிட கொய்யாப் பழத்தில் ஏழு மடங்கு உள்ளது. எலுமிச்சம் பழத்தைவிட மூன்றரை மடங்கும் அதிகமாக உள்ளது. இதனால் கொய்யாப்பழத்தை வைட்டமின் ‘‘சி’’ சுரங்கம், என்றும் கூறுவர்.
கொய்யாவை பற்றிய சில புது மொழிகலும் உண்டு.
"கொய்யா நரம்புகளை வலுப்படுத்தும் மெய்யாய்!"
"கொய்யாவை கடித்துத்தின்னா, பலன் அதிகம் பைய்யா!"
"அய்யா, அய்யா, அருமை மலமிளக்கி கொய்யா!"
"வானவில்’’ இயற்கை அழகரங்கம், ‘‘கொய்யா’’, வைட்டமின் ‘‘சி’’ சுரங்கம்!"
கொய்யாப்பழத்தின் மருத்துவப் பயன்கள்:
கொய்யாப்பழத்தில், அதிக அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால் இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சளிப் பிடிக்காது காக்கும் தன்மை உள்ளது.
சிறுகுடல், பெருங்குடல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்கள், கொய்யாப்பழத்தைத் தின்று வர, நன்கு குணம் கிடைக்கும். கொய்யாப்பழத்திலுள்ள பெக்டின் சத்தும், வைட்டமின் ‘சி’ சத்தும்தான் இந்தக் குணத்திற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அனீமியா என்னும் இரத்த சோகை உள்ளவர்கள், கொய்யாப்பழத்தைக் கூழ் செய்து குடித்து வர, இரத்தவிருத்தி ஏற்படும். சோகை நோய் நீங்கி, நலன் பயக்கும். இதயத்தைச் சீராக இயங்கச் செய்யும் தன்மையும் கொய்யாப்பழத்திற்கு உண்டு.
தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள், தினமும் படுக்கைக்குச் செல்லுவதற்கு முன், ஒரு தம்ளர் கொய்யாப்பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து பருகினால் நன்கு தூக்கம் வரும்.
கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் தனிக்க, கொய்யா பழக்கூழ் பருகினால் போதும்.
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கொய்யாப் பழம் நல்ல பழம். பெரியவர்களுக்கு எலும்பை வலுப்படுத்தும்.
கொய்யா பழத்தின் சதைப்பாகத்தை நன்கு பிசைந்து, காய்ச்சிய பசும் பாலில் கலந்து கொடுத்துவர, குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாகத் திகழ்வர். நன்கு சுறுசுறுப்பு தானே வரும்.
கொய்யாப்பழம், ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஈறு மற்றும் பற்களைப் வலுப்படுத்தும்.
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தொடர்ந்து கொய்யாப் பழச்சாறுடன் திராட்சைப் பழச்சாறு கலந்து பருகிவர, நரம்புகள் பலப்படும். பக்கவிளைவில்லா இயற்கை மருந்து இது.
கொய்யாப் பழக்கூழ் குடித்துவர, சொறி, சிரங்கு குணமாகும். சரும நோய் வராது பாதுகாக்கும். மேனியை பளபளப்பாக வைக்கும் தன்மை கொய்யாப் பழத்திற்கு உண்டு.
கொய்யாப் பழக்கூழுடன், எலும்மிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு சேர்த்து பருகினால், பித்தம் விலகி நலன் பயக்கும்.
காக்கா வலிப்பு உள்ளவர்கள், கொய்யாப் பழக் கூழ் சாப்பிட்டு வர, நோயின் தன்மை கட்டுக்குள் இருக்கும்.
பசி, ருசி இல்லாதவர்கள், கொய்யாப் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடித்தால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்கு பசி ருசி உண்டாகும்.
குறிப்பு:
கொய்யாப்பழத்தை நன்கு கழுவி, சுத்தம் செய்து, தோலுடன் கடித்துச் சாப்பிட்டால்தான் கொய்யாப்பழத்தின் முழுச்சத்துக்களும் நமது உடலுக்குக் கிடைக்கும். குறிப்பாக, வைட்டமின் ‘சி’ சத்து தோலில்தான் மிகுதியாக உள்ளது. சதைப் பகுதியின் உள்ளே போகப் போக வைட்டமின் ‘சி’ சத்தின் அளவு குறைகிறது என உணவியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.