மலேசியாவில் இருந்து தமிழுக்கு முதல் பெண் தயாரிப்பாளர் என்ற அடையாளத்தோடு கோடம்பாக்கம் வந்து, 'அறிந்தும் அறியாமலும்', 'குண்டக்க மண்டக்க', 'பட்டியல்', 'நர்த்தகி', 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' போன்ற படங்களை தயாரித்தவர் 'புன்னகை பூ' கீதா. தயாரிப்பாளராக இருந்த வந்தவர் இப்போது மைந்தன் மற்றும் நீயெல்லாம் நல்லா வருவடா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கீதாவிடம் நடத்திய சிறப்பு பேட்டி...
* திரைப்பட தயாரிப்பாளராக, நடிகையாக, வானொலியில் சிரிக்க சிரிக்க பேசுபவராக எப்படி இது எல்லாம் சாத்தியம்.?
நான் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய ஆசைப்படுவேன், ஏனோ தானோ என்று என் வேலையை முடிக்க மாட்டேன், எந்த ஒரு சின்ன விசயமாக இருந்தாலும் அதில் என் மெனக்கெடல் பெரிதாக இருக்கும். கொஞ்சம் பிளான் பண்ணுவேன், அவ்ளோதான். நீங்க முதலில் தமிழ் சினிமாவுக்குள் வந்த போதும், இப்போதும் எப்படி இருக்கு.? நல்ல திறமைசாலிகளுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். புதுசு புதுசா திறமையாளர்கள் தமிழ் சினிமாவுல நிறைய பேர் இப்போது வந்திருக்காங்க. குறிப்பாக சென்னை ரொம்ப வேகமாக இருக்கு.
* இப்பவும் வானொலியில் பேசி கொண்டு இருக்கிறீர்களா.?
அது என் பேஷன், மலேசியாவில் ராகாணு ரொம்ப பேமஸான ரேடியோவுல 10 வருஷமா வேலை பார்க்கிறேன். முன்னாடி 6 நாள் வேலை பார்த்தேன், இப்போ அதிகமாக வேலை இருப்பதால், வாரம் இரண்டு நாள் மட்டும் போறேன், மக்களிடம் பேசுவது அவ்ளோ ஜாலியான வேலை, எப்பவும் விட மாட்டேன்.
* அது என்ன உங்க பேருக்கு முன்னாடி புன்னகை பூ?
நிறைய பேர் நினைக்கிறாங்க நான் புன்னகை பூ படத்தில நடிச்சேன் என்று... நிச்சயமாக இந்த படத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, நான் ரேடியோவுல பேசுறதுக்கு முன்னாடி உங்க கிட்ட பேசப்போறது கீதானு பேர் வரும், அப்போ ஒரு புன்னகை பூவேனு 12பி பட பாட்டு ஐடி மாதிரி போடுவாங்க, அதுவும் இல்லாமல் நான் மக்கள்கிட்ட சிரிச்சு சிரிச்சு ஜாலியாக பேசுவேன், பேசுறவங்களும் என்னை புன்னகை பூ சௌகியமா என்று கேட்பாங்க, இது நாளடைவில் புன்னகை பூ என்று அடையாளமாக மாறிவிட்டது. இதான் உண்மை.
* இப்போ நீங்க நடித்து வெளிவர உள்ள மைந்தன் படத்தில் என்ன ரோல்?
நான் கொஞ்சம் சாப்பாடு குறைத்து, வெயிட் குறைந்த சமயத்தில், என்னை தேடி வந்த படம் மைந்தன். திருமணம் நிச்சயம் ஆக வேண்டிய பெண்னை வேற ஒரு சம்பவத்தால் மாட்டிவிட்டு, அதில் இருந்து அவ எப்படி வெளியில் வருகிறாள் என்பது தான் கதை. மலேசியாவுல இப்பவும் நடந்துகிட்டு இருக்கும் ஒரு பிரச்னையை மைந்தன் படத்தில் சொல்லியிருக்காங்க.
* நீ எல்லாம் நல்ல வருவடா பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
இயக்குனர் நாகேந்திரன் என்னை தொடர்பு கொண்டு கதை சொன்னார். இந்த ரோல் நான் செய்தால் நல்லா இருக்கும்னு சொன்னார், கேட்டதும் ஓகே சொல்லிட்டேன். இந்த படத்தில ஈவன்ட் மேனஜ்மெண்ட் பண்ற ரோல், இந்தப்படத்தில நடித்ததை என்னால் மறக்க முடியாது. ஏனா, ஊட்டியில் ஒரு காட்டில் ஷூட்டிங் நடந்தது, அப்போது ஏறி குதிக்கும் காட்சி படமாக்கும்போது, மரத்தில் இருந்த குச்சி இடுப்பில் குத்தி, அப்படியே இருண்டு போய் உட்கார்ந்தேன். அடுத்த சில நிமிடங்களில் அடுத்த ஷாட்டுக்கு போய்விட்டேன். ஷூட்டிங் முடித்து ஹோட்டலில் வந்து பார்த்தால் ஒரே ரத்த களரியா இருந்தது. அந்த தழும்பு எப்பவும் என்னோட இருக்கும்.
* தமிழில் கிளாமர் ரோல், இரண்டு ஹீரோயின் ரோல் பண்ண சொன்னால் நடிப்பீர்களா.?
முதலில் கதை கேட்பேன், கதையில் எனக்கு என்ன முக்கியத்துவம் என்று பார்ப்பேன். கதைக்கு கிளாமர் தேவைபட்டால் கண்டிப்பாக நடிப்பேன், பாக்கலாம் என்கிறார் இந்த புன்னகை பூ.