இலகுவில் தயாரிக்ககூடிய கிறிஸ்மஸ் மரம்.

தேவையான பொருட்கள்:-

பச்சை வானீஸ் பேப்பர் - 1
சிவப்பு வானீஸ் பேப்பர் - 1
செலோடேப் - 1
கம்
செய்தி தாள்கள்
அலங்கார பொருட்கள்

செய்முறை:-

வானீஸ் பேப்பர்களை நீளம் கூடியதாகவும்   அகலம் குறைந்ததாகவும்வெட்டிக்கொள்ளவும்.பின்பு அவற்றில் அடி பக்கம் கொஞ்சமாக வெட்டிக் கொள்ளவும்.

அநேக செய்திதாள்களை ஒன்றாக வைத்து அவற்றை கோன் வடிவில் சுற்றவும். பின்பு அவை கழறாமல் இருக்க செலோடேபினால் ஒட்டி கொள்ளவும். அதன் மீது வெட்டிய பச்சை,சிவப்பு நிற வானீஸ் பேப்பர்களை அவற்றை சுற்றியும் கீழ் நோக்கியும் ஓட்ட வேண்டும். பின்பு அந்த மரத்தை அலங்கார பொருட்கள் கொண்டு ஒட்டி விரும்பியவாறு அலங்கரிக்கவும்.