சுவை கொண்ட அரிசி வடை.

தேவையான பொருட்கள்.

அரைமூடி தேங்காய்         - துருவியது
சின்ன வெங்காயம்            - 15 (நறுக்கியது)
புழுங்கல் அரிசி                   - 1/5 கப் (வறுத்தது)
பச்சை மிளகாய்                   - 5 (நறுக்கியது)
எண்ணெய்                             - தேவையான அளவு
உப்பு                                          - சுவைக்கேற்ப
தண்ணீர்                                  - தேவையான அளவு

செய்முறை:-

வறுத்து வைத்துள்ள அரிசியை இடியப்பமா பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.  வெட்டிய பச்சை மிளகாய், வெங்காயத்தை  தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் அரைப் பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை அரிசி மாவில் இட்டு சுவைக்கேற்ப உப்பு  சேர்த்து பிசைந்து வட்டவடிவில் தட்டி பொரித்தெடுங்கள்.