இலகுவான வெங்காய பச்சி.


தேவையான பொருட்கள்.

பெரிய வெங்காயம்-  5
ரம்பை  இலை - தேவையான அளவு
வெள்ளைபூடு - 5பற்கள்.
காய்ந்த மிளகாய் - 5
மாவு - 200 கிராம்
சிறுஞ்சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பெருச்சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
அப்பசோடா - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டுகள்
உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை.


வெங்காயம்,ரம்பை,பூடு,காய்ந்த மிளகாய் என்பவற்றை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள்,மிளகுத்தூள்,அப்பச்சோடா, சிறுஞ்சீரகம் , பெருச்சீரகம் என்பவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதற்கு தேவையான அளவு உப்பு, தண்ணீர் இட்டு பிசைந்துப் பொறித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:- 
                    அதிகம் மொறுமொறுப்பாக உண்ண விரும்புபவர்கள் இதில் ஒரு
                    மேசைக்கரண்டி அளவு அரிசிமாவையும் அதிகம் சுவைக்கு                                         கடலைமா ஒரு மேசைக்கரண்டி அளவும் சேர்த்துக் கொள்ளலாம்.