வீட்டில் தயாரிக்க கூடிய வெனிலா ஐஸ்கிரீம் .


தேவையான பொருட்கள்.

மில்க்மெயிட்-1
ரின் தண்ணீர்- 2
ரின் ஜெலற்றீன்
1 மே.க வனிலா எசன்ஸ்
3 மே.க சீனி ருசிக்கேற்ப

 செய்முறை.

ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும். அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். 2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும். 1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும்.
வனிலா எசன்ஸ்சைச் சேர்த்து பீட்டரால் அல்லது கரண்டியால் நுரை பொங்க அடிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃபீரிசரில் 6-7 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை வெளியே எடுத்து 2 மடங்கு பொங்கிவரும் வரை அடிக்கவும். மீண்டும் ஃபீரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.