பொருத்தமான நகைகளை அணியுங்கள்.

குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அல்லது ஒற்றைக்கல் நெக்லஸ் அணியலாம்.

ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள். பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும்.புடவை சிம்பிலாக இருக்கும்பட்சத்தில் டெம்பிள் குந்தன், போன்ற நகைகள் அணியலாம். இது எல்லோருக்குமே பொருந்தும். ஸ்கை ப்ளூ, பேபி பிங், டல் ஒயிட், லைட் ப்ரவுன், க்ரே, அல்ட்ரா போன்ற வண்ணங்களை கொண்ட ஆடைகள்  எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமானதாகும்.
பொதுவாகவே உயரமாகவும் ஒல்லியாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும். ஒரு நீளமான செயினுடன் அகலமான சோக்கர்,நெக்லஸ், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியுங்கள்மெல்லிய விரலுக்கு பட்டையான சலங்கை வைத்த மெட்டி அழகாக இருக்கும்.
கணுக்கால் பகுதி ஒல்லியாக இருந்தால் பட்டையான கொலுசு போடுங்கள்.

குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப நகை மற்றும் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்  பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும்.மெல்லியதான பீட்ஸ், சின்ன சைஸ் முத்து, மெல்லிய சங்கிலி  இவற்றை சிறிய டாலருடனோ அல்லது ப்ளெய்ன் ஆகவோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும். மெல்லிய, நீண்ட செயின்களை  டாலர் இல்லாமல் அணிந்தால் கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.

மெல்லிய ஒரே சலங்கை வைத்த கொலுசு குண்டான கால்களுக்கு அழகாக இருக்கும். விரல்கள் கொழுகொழுவென்று இருந்தால் இரண்டாவது விரலில் மெல்லிய மெட்டி போட்டால் அழகாக இருக்கும்நடுத்தரமான கால்களுக்கு பட்டையான மெல்லிய, கொலுசு இரண்டுமே பொருத்தமாக இருக்கும்.

நீலம், ரூபி, பச்சை  போன்ற கற்கள், மணிகள் உள்ள நகைகளை வெள்ளையானவர்கள் அணிந்தால் அழகாக இருக்கும்.

கறுப்பு நிறம் உள்ளவர்கள் அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். மெல்லிய நகைகளை அணியுங்கள் வைர நகைளை அணிந்தால் அழகாக இருப்பதுடன் முத்து வகை, வெள்ளை, பிளாக் மெட்டல், நகைகள் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.
.