விண்டோஸ் 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விண்டோஸ் 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விண்டோஸ் 7 பயனாளர் மாற்றம்.

விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், மாறா நிலையில் ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அதன் பின்னர் பயனாளர் அக்கவுண்ட் (standard user account) எனப் பலவற்றை உருவாக்கலாம்.

இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொருஅட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டையும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைத்து இருவேறு அக்கவுண்ட்களிடையே பயனாளர் மாறிக் கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்குவது என கீழே தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் 7 மூலமாக கிடைக்கும் வசதிகள்.

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.

தனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன.