விண்டோஸ் 7 பயனாளர் மாற்றம்.

விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், மாறா நிலையில் ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அதன் பின்னர் பயனாளர் அக்கவுண்ட் (standard user account) எனப் பலவற்றை உருவாக்கலாம்.

இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொருஅட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டையும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைத்து இருவேறு அக்கவுண்ட்களிடையே பயனாளர் மாறிக் கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்குவது என கீழே தரப்பட்டுள்ளது.
* கண்ட்ரோல் பேனலைத் திறந்து “User Account” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

* அல்லது ஸ்டார்ட் மெனுவில் “User Account” என டைப் செய்து தேடலாம்.

* அடுத்து, நாம் அக்கவுண்ட் வகையினை மாற்றிக் கொள்ள, “change your account type” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

* இன்னொரு பயனாளர் அக்கவுண்ட்டில் செயல்பட “Manage another account” என்பதில் கிளிக் செய்திடவும்.

* பயனாளருக்கான ஐகானில் (“user’s icon”) டபுள் கிளிக் செய்திடவும். அல்லது “Change the account type” என்பதில் ஒருமுறை கிளிக் செய்திடவும். இதன் மூலம் இப்போது ஒரு புதிய விண்டோ “Select a new account type for [xyz user]” என்ற தலைப்பில் கிடைக்கும். இதில் இரண்டு ஆப்ஷன்கள் –– “Administrator” or “Standard user” –– கிடைக்கும்.

* தேவையான ஆப்ஷன் தேர்ந்தெடுத்தவுடன் “Change account type” என்பதில் கிளிக் செய்திடவும்.

இதே போல அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் இருந்து பயனாளர் அக்கவுண்ட்டிற்கும் மாறிக் கொள்ளலாம்.