அமிதாப்பச்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமிதாப்பச்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தனுசுக்கு கன்னடத்தில் சான்ஸ் வாங்கிக்கொடுத்த கொலவெறி பாடல்!

தனுஷின் இசைப்பயணத்தில் கொலவெறி பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில்தான் அந்த பாடல் இடம்பெற்றிருந்தது. அனிருத் அந்த படத்தில்தான் அறிமுகமானார்.

அது மட்டுமின்றி அந்த ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை தனுஷே எழுதி பாடியும் இருந்தார். அப்பாடல் வெளியான சில தினங்களிலேயே சூப்பர் ஹிட்டானது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமானது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்கூட அந்த பாடலைக் கேட்டுவிட்டு தனுஷை பாராட்டியிருந்தார். ஆக, எத்தனையோ படங்களில நடித்திருந்தபோதும் அவர் பாடிய அந்த ஒருபாட்டு அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது.