"மகாபாரதமும் நிஜமே!"ஆதாரபூர்வமாக நிருபித்து உள்ளனர்.

இராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka. புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இது மகாபாரதக்கதை நிஜத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.

 கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகில் உள்ள பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. கடற்கரையிலிருந்து சுமார் அரை மைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர் கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்ததாக இருக்கின்றன. கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்குதலமாகவும் அமைந்திருக்கிறது. மேலும் தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’ என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக் கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிடுக் கட்டப்பட்டுள்ளது. இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது. த்வாரமதி, குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது. எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள், குடியிருப்புகள், வியாபார ஸ்தலங்கள், அகன்ற சாலைகள், பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக்கொண்டு விளங்கியது துவாரகை.

மகாபாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு (தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று காத்தார்.இந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக் கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது