மீடியாவை கண்டாலே அலர்ஜியாகும் த்ரிஷா..

ஆர்யா தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்கு த்ரிஷாவும், நயன்தாராவும ஜோடி போட்டு வந்திருந்தனர். ஆனால், அவர்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அழைத்தால் மட்டும் நான் அன்றைய தினத்தில் அமெரிக்காவில் இருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன் என்று சொல்லி எஸ்கேப்பாகி விடுகிறார்கள்.

அப்படித்தான் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள பூலோகம் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொள்வதற்கு த்ரிஷாவை அழைத்தபோது, உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றிருப்பதாக அப்பட நாயகனான ஜெயம்ரவி தெரிவித்தார். இந்த நிலையில், கெளதம்மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படத்தின் பிரஸ்மீட்டோ, ஆடியோ விழாவோ நடந்தால் அதில் அஜீத் கலந்து கொள்ளப்போவதில்லை என்பதால் அதை வைத்து தானும் ஜகா வாங்கி விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.


இப்படி த்ரிஷா மீடியா சந்திப்புகளை தவிர்ப்பதற்கு என்ன காரணம் என்று அவர்தரப்பில் விசாரித்தால், அவரை சந்தித்த எந்த மீடியாவினரும், நல்ல விசயம் பற்றி இதுவரை கேள்வி கேட்டதில்லை. எப்போது சந்தித்தாலும் முதல் கேள்வியே ராணாவுடனான காதல் பற்றிதான் கேட்பார்கள். இல்லையேல் ஏதாவது கிசுகிசு பற்றி கேட்கிறார்கள். அதனால்தான் அவருக்கு மீடியாவைக்கண்டாலே அலர்ஜியாகி விட்டது என்கிறார். இந்த நிலையில், தற்போது அவர் தலைகாட்டினால், தயாரிப்பாளர் ஒருவருடன் அவரை இணைத்து செய்தி பரப்பி வருபவர்கள், அதைப்பற்றியே துருவி துருவி கேள்வி கேட்டு இன்னும் விசயத்தை ஊதி பெருசாக்கி விடுவார்கள். அதனால்தான் மீடியாக்களை விட்டு விலகியிருப்பதே தனக்கு நல்லது என்று த்ரிஷா கருதுவதாக சொல்கிறார்கள்.