2 கப் பாலை, 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். சர்க்கரையை உங்கள் விருப்பப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டுக் கொள்ளலாம். தீயைக் குறைத்துவைத்து, நிதானமான தீயில் காய்ச்சவேண்டும். 4 பாதாம்பருப்புகளை எடுத்து, கொதிக்கும் நீரில் போட்டெடுத்து, தோலைத் தேய்த்தால், தோல் நீங்கிவிடும். அதோடு 4 முந்திரிப்பருப்புகளைச் சேர்த்து, விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதையும் பாலோடு சேர்த்து காய்ச்சுங்கள். பால் சற்றுக் குறுகியதும், அரை டீஸ்பூன் ஏலக்காய்தூள், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் கலக்கி, இறக்குங்கள். இன்னும் கொஞ்சம் பாதாம்பருப்புகளை(7 அல்லது 8) தோல் நீக்கி, பொடியாக நறுக்கி, பாலின் மேல் தூவி, சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறுங்கள். முந்திரி, பாதாம், குங்குமப்பூ வாசத்தோடு, சூப்பர் டேஸ்ட்டி மசாலா பால் உங்கள்) வீட்டிலேயே தயார் ஆயிடுச்சு, பாருங்க!’’