வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட பெருந்தொகைக்கு உரிய வரி செலுத்தாமல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக , வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில், முன்னணியில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
இவர் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதேபோல், 2010-11ம் ஆண்டில், பிரிட்டனை சேர்ந்த மொபைல்போன் நிறுவன்ததிற்கு, ரிங்டோன் தயாரித்து கொடுத்திருந்தார். இதற்காக, அந்நிறுவனம், ரகுமானுக்கு ரூ. 3.47 கோடி சம்பளமாக வழங்கியது. இந்த தொகையை, ரகுமான் நேரடியாக பெறாமல், தனது டிரஸ்ட் அக்கவுண்டில் செலுத்தி விடுமாறு கூறியுள்ளார்.
அந்நிறுவனமும் அவ்வாறே செய்துள்ளது. ரகுமானிற்கு சொந்தமான டிரஸ்டிற்கு, வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், இருந்தபோதிலும், அந்த டிரஸ்ட் அக்கவுண்டில், பெருமளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு உரிய வரி செலுத்தப்படவில்லை. வரி ஏய்ப்பு செய்து, வருமான வரித்துறையினரை, ரகுமான் ஏமாற்றியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த பணம் தொடர்பாக, 50 சதவீத வரி ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது. பிக்செட் டெபாசிட்டில் உள்ள அந்த பணம் குறித்த ஆவணங்களை, வருமான வரித்துறையினர் ஏற்கனவே ஆய்வு செய்துவிட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரத்தை, மீ்ண்டும் ஏன் அவர்கள் பிரச்னை ஆக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக, ரகுமான் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.