பற்களின் நோய்கள்
:-
1. துத்தி இலை
ஒரு கைப்பிடி பறித்துக் கழுவி வாயில் மெல்லவும்.
2. காட்டாமணக்கு
குச்சியைக் கொண்டு பல்துலக்கிவரவும் , பல்நோய்கள், பல்வலி, பல்ஈறு நோய் தீரும்.
வாய் நாற்றம்
அகல:-
1. நீரில்
எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வாய் கொப்பளித்தால் பேசும் போது வெளிப்படும் வாய்
நாற்றம் அகலும்.
3.
எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய்
துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும்.
வாய்
நாக்குப்புண் தீர
:-
இளங்கோவைக்காயை
வாயிலிட்டு மென்று துப்பவும்.
எலுமிச்சை தோல் :
பற்கள் பளபளக்கும்
உள்நாக்கு
வளர்ச்சி
உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.
வாய்ப்புண் தீர
:-
மணத்தக்காளி
இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து வரவும்.
வாய்ப்புண்,
வயிற்றுப்புண் :-
அகத்திக்
கீரையும், பூவையும்
சமைத்துச் சாப்பிட்டு வரவும்
உடம்பில்
இரத்தப்பாதையில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்கு:
எலுமிச்சம்பழம்,
வெற்றிலைச்சாறு, பாதரசம் இவற்றை உடம்பில் உள்ள கொழுப்பின்
அளவைப்பொறுத்து மூலிகைச்சாற்றுடன் பாதரசத்தை கரைத்து உட்கொள்ளவேண்டும். இதனால்
உடம்பில் இரத்தக்குழாயில் அடைபட்டுள்ள கொழுப்பு மட்டும் உடன் குறைந்து நல்ல
நிவாரணம் கிடைக்கும். (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது)
நகம் சொத்தை,
இளம் வயது கருக்கா பற்கள்,
பல் சொத்தை
இவற்றிலிருந்து நிவாரணம் பெற:
விஸ்வா இலுப்பை
எண்ணை என்று நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி எந்த நேரத்திலாவது
நகம் மற்றும் புறக்கைகளிலும், கால் நகம்,
புறங்கால்களிலும்
தொடர்ந்து தடவி வர விரைவில் குணமாகும். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது.
(இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது
பித்தம் தணிய
கறிவேப்பிலையைத்
துவையல் செய்து சாப்பிட பித்தம் தணியும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை
எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்
கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
பல்லில்
புழுக்கள்
சிறிது
வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின்
எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும். வெண்மையான பற்களைப் பெற...
வெண்மையான
பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும்.
தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும்
பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ
வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
வலுவான பற்கள்
வேப்பங்குச்சியினால்
பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி,
பொரியல் செய்து அல்லது
சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால்
வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.