அழுத்தமான வேடம் கேட்கும் சமுத்திரகனி!

சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்த டைரக்டர் சமுத்திரகனி, அதன்பிறகு ஈசன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தவர், சாட்டை படத்தில் நல்ல பொறுப்பான ஆசிரியராக நடித்திருந்தார். அந்த படம் அவரது நடிப்புக்கு நட்சான்றிதழ் கொடுத்தது. அதிலிருந்து சமுத்திரகனியின் நடிப்புக்கு கோடம்பாக்க டைரக்டர்களிடையே ஒரு மரியாதை ஏற்பட்டது.

இந்நிலையில், படம் இயக்குவதை போலவே நடிப்பிலும் ஆர்வம் கொண்டவரான சமுத்திரகனி, பின்னர், வேலையில்லா பட்டதாரியில் அப்பா வேடத்திலும் அருமையாக நடித்தவர்,
தற்போது ஆதார், சண்டமாருதம், நீயெல்லாம் நல்ல வருவடா, மாஸ் போன்ற படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றார். மேலும், தன்னிடம் நடிக்க கால்சீட் கேட்டு வரும் டைரக்டர்களிடம், என்னை பொறுத்தவரை படம் முழுக்க வர வேண்டும் என்கின்ற ஆசையெல்லாம் இல்லை. ஆனால்  நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் அழுத்தமானதாக இருக்க வேண்டும். படத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் எனது கேரக்டர் ரசிகர்களின் மனதில் ஆழமான பதியக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தனது சார்பில் கேட்டு கொள்கின்றாராம் சமுத்திரகனி. இதனால் அவரை புக் பண்ணும் டைரக்டர்கள், அவரிடம் கதை சொல்லிவிட்டு வந்த பிறகு அவரது கதாபாத்திரத்திற்கு காட்சிகள் மற்றும் டயலொக்கை இன்னும் அதிகப்படுத்தி கூடுதல் பர்பாமான்ஸ் கேரக்டர்களாக மாற்றியமைக்கின்றார்கள்.