பல வகை முட்டைகளின் தன்மைகள்.

கோழி முட்டை

தன்மை : சூடும் , கொழுமையும் ஆகும்
நன்மை : உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும் , சூட்டைப் பற்றிய பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரைவரிசை வேகவைக்கும் பொழுது இந்த குணங்களை காட்டும்.

நோய் : அதிகமாக வெந்தால் மந்தப்படும்
மாற்று : சூட்டு உடலுக்கு நாட்டுக்காடி , குளிர்ச்சி உடலுக்கு
உகந்தது.

வாத்து முட்டை

தன்மை : குளிர்ச்சியும் ,சிலிர்ப்புமாகும்
நன்மை : உடல் வலிமை ஏற்படும் , உடல் பருக்கும்

நோய் : மந்திக்கும் , வயிறு வலிக்கும்
மாற்று : இஞ்சி , சீரகம் , கொத்தமல்லி

மீன் முட்டை

தன்மை : சூடும் , குளிர்ச்சியும் ஆகும்
நன்மை : உடல் தழைக்கும் ,பலம் ஏற்படும் ,அதிசார பேதிகளை
நிறுத்தும் .

நோய் : வயிற்றில் களிம்பு கட்டும்
மாற்று : மிளகு , கடுகு , சீரகம்

புறா முட்டை

தன்மை : சூடும் ,கொழுமையும் ஆகும்

நன்மை : ஜீரணப் படும் , நீர் சம்பந்தமாக நோய்களைக்
கண்டிக்கும் , உடல் தழைக்கும் , தாது அதிகரிக்கும் ,
விந்து விளையும்

நோய் : சூடு , உண்டாகும்
மாற்று : பசுவின் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்

மயில் முட்டை

தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்
நன்மை : பிடிப்புகளை மாற்றும் , கடிகளை நீக்கும் , வலிமை
உண்டாக்கும் , ஜீரணப்படும்

நோய் : சூடு , உண்டாக்கும்
மாற்று : கொத்தமல்லிக் கீரை ,வெங்காயச் சாறு

காக்கா முட்டை

தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்

நன்மை : மண்ணீரலுக்கு வலிமை தரும் , காமாலை , பித்தம்
பாண்டு , சோகை , இவைகளை நீக்கும் , ஜீரணமாகும் ,
கண்ணொளி அதிகப்படும்

நோய் : சூட்டு உடம்புக்கு பயன்படாது
மாற்று : வெங்காயச்சாறு , கொத்தமல்லி கீரை

ஆமை முட்டை

தன்மை : குளிர்ச்சியும் , வறட்சியுமாகும்
நன்மை : வலிமை தரும் , உடல் தணியும் ,அதிசார பேதிகளை
கட்டி விடும் , குடலுக்கு வலிமை உண்டாகும்

நோய் : நெஞ்சு கரிக்கும
மாற்று : ஏலம் , சீரகம்