மகள் பள்ளியில் கேமராவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜீத்

தமிழ்நாட்டின் மோஸ்ட் சென்ஷேசனல் விஐபி அஜித். அவர் பேசாவிட்டாலும் அவரைப் பற்றியும், அவரது படத்தை பற்றியும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். என்னை அறிந்தால் படம் எப்போதும் வரும் என்று எல்லோரும் பரபரத்து கிடக்கின்றார்கள். அடுத்த படத்துக்கு கால்சீட் தருவாரா என்று கோடிக்கணக்கான பணத்தை மடியில் கட்டிக்கொண்டு வரிசையில் நட்கின்றார்கள் தயாரிப்பாளர்கள்.

அவர் முகத்தை ஒரு முறை பார்த்து விட மாட்டோமா என்று தவமிருக்கும் ரசிகர்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு தந்தையாக தன் பங்கை சரியாக செய்திருக்கின்றார் அஜித். சுமாராக வேலையில் இருந்து கொண்டு சில ஆயிரம் சம்பாதிப்பவர்கள்கூட பெற்ற மகளை கவனிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.
மகளின் பள்ளி விழாவா, ஸ்கூல் அட்மிஷனா, ஹெச் எம்மை பார்க்க வேண்டுமா எல்லாவற்றுக்கும் செல்வது அம்மாதான். தவிர்க்க முடியாத நிலையில் மட்டும்தான் அப்பா. ஆனால் அஜித் தன் மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியின் ஒரு சிறிய விழாவில் மகளுக்காக ஒரு நாள் முழுதும் செலவளித்திருக்கின்றார். அதோடு தன மகளையும், மகளின் தோழிகளையும் ஒரு போட்டோகிரப்பராக மாறி படம் எடுத்திருக்கிறார். ஒரு டாப் ஹீரோ என்கின்ற எந்த பந்தாவும் இல்லாமல் அந்த பள்ளி காம்பவுண்டுக்குள் ஒரு தந்தையாக இருந்து தன் மகளை ரசித்திருக்கிறார் அஜித். அந்த பள்ளிக்கு வந்த மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் அஜித்தை ஒரு பெரிய ஸ்டாராக பார்க்காமல் சக தந்தையாகவே பார்த்திருப்பதும் ஆச்சரியம்.