தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கவுள்ளார். இந்த பிரம்மாண்டமான செட்டில் சண்டைக்காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளார் சிம்புதேவன்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் சுருதி ஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதிப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நட்ராஜ் கவனிக்கவுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை பி.டி.செல்வகுமார் தயாரித்து வருகிறார்.