1990ல் வைகாசி பொறந்தாச்சி என்ற படத்தை இயக்கியவர் ராதாபாரதி. இந்த படத்தில்தான் பிரசாந்த் நாயகனாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக காவேரி நடித்திருந்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானபோதும் அதையடுத்து அவர் உடனடியாக படம் இயக்கவில்லை.
15 ஆண்டுகளுக்கு பிறகு 2005 ல் காற்று உள்ளவரை என்ற படத்தை இயக்கினார்.அதைத் தொடர்ந்து இப்போது நண்பர்கள் நற்பணி மன்றம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப்போன்று காதல், காமெடி கலந்த கலகலப்பான கதையில் இயக்கிக் கொண்டிருககிறாராம் ராதாபாரதி.
குறிப்பாக, அவரது முந்தைய படங்களைப் போன்று கிராமிய கதையில் தயாராகும் இப்படத்தில் சிங்கம்புலி முக்கியத்துவம் வாய்ந்த காமெடி ரோலில் நடிக்கிறாராம். இதற்கு முன்பு அவர் காமெடியனாக நடித்த முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், எத்தன், மரம்கொத்தி பறவை, தேசிங்கு ராஜா ஆகிய படங்களை விடவும் இந்த படத்தில் படம் பார்ப்பவர்களின் வயிறை பதம்பார்ககும் வகையில் காமெடி காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம்.
ஏற்கனவே புரோட்டா சூரி, ப்ளாக் பாண்டி உள்ளிட்ட சில காமெடியன்களுடன் இணைந்து நடித்திருந்த சிங்கம் புலி, இந்த படத்தில், அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாசுடன் நடித்த ஷங்கர் மட்டுமின்றி, சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் புகழ் பெற்ற சில இளைஞர்களையும் தனது காமெடி இலாகாவில் இணைத்திருக்கிறாராம். அதனால் இந்த படத்தில் இருந்து சிங்கம்புலியின் காமெடி தர்பார் யூத்புல்லாக உருவெடுக்கிறதாம்.