விஜய் படம் பார்த்தாலே ஜாலியா இருக்கும்!- விக்ரம்

இளைய தளபதி விஜய் படங்கள் பற்றி விக்ரம் கூறுகையில் விஜய் படம் என்றாலே காதல், ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி, நடனம் என அனைத்து ஜனரஞ்சகமான விசயங்களும இருக்கும். அதனால்தான் அவர் படங்கள் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்கிறது.

அவரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக அந்த மாதிரியான கதைகளாகவே பெரும்பாலும் செலக்ட் பண்ணி நடிக்கிறார். அந்த வகையில், ரசிகர்களுக்குத்தான் விஜய் படம் பிடிக்கிறது என்றால் சீயான் விக்ரமுக்கும் விஜய் நடிக்கும் படங்கள் ரொம்ப பிடிக்குமாம்.
அதனால் அவர் நடித்த படங்களை தவறாமல் தான் பார்த்து ரசித்து விடுவதாக சொல்கிறார் விக்ரம். இதுபற்றி அவர் கூறுகையில், முதலில் விஜய் எனது நண்பர் என்கிற முறையில்தான் அவரது படங்களை பார்க்கத் தொடங்கினேன். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் ரொம்ப ஜாலியாக கலகலப்பாக இருக்கும். அதனால் இப்போது விஜய் படம் வருகிறது என்றால் அதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று கூறும் விக்ரம், முதலில் விஜய்யின் நண்பராக மட்டுமே இருந்த நான் இப்போது அவரது ரசிகராகவும் மாறிவிட்டேன் என்கிறார் விக்ரம்.