வஜ்ரம் படக்குழுவினரின் நடத்திய மாரத்தான் போட்டி

பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் தற்போது நடித்து வரும் படம் ‘வஜ்ரம்’. இப்படத்தில் கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பைசல் இசையமைக்கும் இப்படத்திற்கு குமரேசன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை அமைத்து எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்குகிறார். ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக பி.ராமு தயாரிக்கிறார்.


‘அனைவருக்கும் கல்வி, காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம், இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம்’ என்ற கருத்தை மையமாக வைத்து வஜ்ரம் படத்தை உருவாக்கி வருகிறார்கள். இக்கருத்து அனைத்து மக்களிமுடம் சேரவேண்டும் என்ற நோக்கில் இன்று காலை 8.30 மணியளவில் மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் கலைப்புலி எஸ்.தாணு, தம்பி ராமையா, கே.ராஜன், ஜெயபிரகாஷ், சித்ரா லட்சுமணன், வின்சென்ட் அசோகன், மற்றும் வஜ்ரம் படத்தில் நடிக்கும் ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி படத்தின் இயக்குனர் ரமேஷ்செல்வன் மற்றும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.