கத்தி, பூஜையுடன் வெள்ளைக்கார துரை டிரைலர்!

சிகரம் தொடு படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்து வரும் படம் வெள்ளக்கார துரை. எழில் இயக்கி வரும் இப்படத்தில், விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். ரியல் எஸ்டேட் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

தஞ்சை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. எழிலின் வழக்கமான காமெடி, இந்தப்படத்திலும் தொடர்கிறது. ஏற்கனவே விக்ரம் பிரபு முன்பு ஒரு பேட்டியில் வெள்ளக்கார துரை படம் காமெடி படம் என்றும், இது ஒரு புதுவித அனுபவத்தை தந்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை தீபவாளி அன்று வெளியிட உள்ளனர். அதுவும் தீபாவளிக்கு வெளிவரும் விஜய்யின் கத்தி, அல்லது, விஷாலின் பூஜை படத்தோடு வெள்ளக்கார துரையின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பல படங்களை வாங்கி விநியோகம் செய்த மதுரை கோபுரம் பிலிம்ஸ் அன்பு நேரடியாக தயாரிக்கும் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.