துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முருகதாஸ்-விஜய் கூட்டணியில், இந்த தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள படம் கத்தி. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, வசூலையும் குவித்து வருகிறது. இதற்கிடையே கோவையில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்த விஜய், சில நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிலையில் கத்தி படம் வெற்றி தொடர்பாக, சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை மாலையில் சந்தித்தார் நடிகர் விஜய். ஆனால் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத விஜய் இப்படத்தை வெற்றியடைய செய்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டு ஒவ்வொரு பத்திரிகையாளர்களிடமும் தனித்தனியாக நின்று போட்டோ மட்டும் எடுத்து கொண்டார். கத்தி படம் தொடர்பாக விஜய்யிடம் பல கேள்விகளை கேட்க நினைத்திருந்த பத்திரிகையாளர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர்.