ஒட்டும் தன்மையற்ற (நான் ஸ்டிக்), சமையல் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவை உண்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,
´நான் ஸ்டிக்´ சமையல் பாத்திரங்களில், ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க, சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வேதிப்பூச்சுகள், விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் போது, வேதிப்பூச்சுகள் உணவில் கலந்துவிடுகின்றன.
இதனால், இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம், மனித உடலில் கேடுகளை விளைவிக்கின்றன. இதனால், ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உண்பவர்களுக்கு, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும், ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அனைவரின் இரத்தத்திலும், வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதின் மூலம், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பூச்சுகளே, இவ்வகை பாதிப்புகளுக்கு காரணமாய் இருப்பதால், அவற்றில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.