திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்! - ஷாக் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்.

கமல்ஹாசன்- சரிகா நட்சத்திர தம்பதியரின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசன். உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவருக்கு அதையடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் அழகும், நடிப்புத்திறமையும் இருந்ததால் லக் இந்தி படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கினார். முதல் படத்திலேயே பிகினி உடைதரித்து இந்தி சினிமாவையே கலக்கி எடுத்தார். அதோடு, படத்துக்குப்படம் அதிக கிளாமரை எக்ஸ்போஸ் செய்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
ஆனால், இந்த தாராள கிளாமர் காரணமாகவே ஸ்ருதியின் மார்க்கெட் அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே கெட்டியாக உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், எனது பெற்றோரைப் போன்று நானும் சமூக கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவிலலை. அதோடு, எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், அதற்கு முன்பு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது முதல் ஆசையாக உள்ளது என்று திடுக் செய்தி வெளியிட்டுள்ளார்.