இதுவரை வீட்டை அலங்கரிக்க பல பொருட்களைப் பயன்படுத்தியிருப்போம். அதிலும் அவ்வாறு அலங்கரிக்க கடைகளில் விற்கும் எத்தனையோ அலங்கரப் பொருட்களான பூ
ஜாடி, பொம்மைகள் என்று வாங்கியிருப்போம். ஆனால் இப்போது வீட்டின் உள்ளே அழகாக பச்சை பசேலென்று, குளிர்ந்த காற்று வீசுவதற்கும், அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் வகையிலும், தோட்டத்தில் மட்டுமே வளர்த்து வந்த செடிகளில் சில செடிகளை வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். சொல்லப்போனால் வீட்டின் உள்ளே அலங்கரிப்பதற்காக உள்அலங்காரச் செடிகள் என்று சில செடிகள் கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆகவே அத்தகைய செடிகளை வாங்கி, வீட்டின் உள்ளே வைத்து, அலங்கரித்து வந்தால், வீடே அழகாக காட்சியளிக்கும். மேலும் அவ்வாறு வீட்டின் உள்ளே வளர்க்கும் செடிகள் அனைத்தும் ஈஸியாக பராமரிக்கப்படுபவையாக தான் இருக்கும். இதற்கு என்று எந்த ஒரு பெரிய இடமும் தேவையில்லை. வெறும் பிளாஸ்டிக் அல்லது சிறு தொட்டிகள் இருந்தாலே, அவற்றை வளர்க்கலாம்.
இப்போது அந்த மாதிரியான உள்அலங்கரத்திற்குப் பயன்படும் செடிகளில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்துப் பார்த்து, உங்கள் வீடுகளை அலங்கரித்து மகிழுங்கள்.
மூங்கில் (Bamboo)
நிறைய வீடுகளில் அதிர்ஷ்டத்திற்காக மூங்கில் செடியை வளர்ப்பார்கள். இத்தகைய செடியை வீட்டில் படுக்கை அறை அல்லது ஹாலில் வைத்தால், அழகாக இருக்கும்.
மணி ப்ளாண்ட் (Money plant)
இதய வடிவ இலைகளைக் கொண்ட மணி ப்ளாண்ட் செடியை நிறைய வீடுகளில் அழகுக்காக வளர்ப்பார்கள். இந்த செடியை வீட்டின் பால்கனி அல்லது ஹாலில் வைத்து வளர்த்து வரலாம்.
ஸ்பைடர் ப்ளாண்ட் (Spider plant)
அழகுக்காக வளர்க்கும் செடிகளில் மிகவும் எளிதில் வளரக்கூடிய செடிகளளில் நீளமாக இலைகளைக் கொண்ட ஸ்பைடர் செடியும் ஒன்று. இதை வீட்டில் வளர்த்தால், கண்ணுக்கு இனிமையான தோற்றத்தில் காணப்படும்.
ஸ்நேக் ப்ளாண்ட் (Snake Plant)
ஸ்நேக் ப்ளாண்ட்டை மாமியாரின் நாக்கு போன்றது என்று சொல்லலாம். ஏனெனில் இதன் இலைகள் பார்ப்பதற்கு, அவ்வாறு காணப்படும்.
ஆப்ரிக்கன் வயலட் (African violet)
இந்த செடி பார்ப்பதற்கு சிறிதாகவும், அழகாகவும் பூக்களுடன் காணப்படும். இந்த செடியை கதவு மற்றும் படுக்கை அறையின் பக்கத்தில் வைத்தால், வீடே அழகுடன் தோற்றமளிக்கும்.
காக்டஸ் (Cactus)
பொதுவாக வீட்டிற்குள் அழகுக்காக வளர்க்கும் செடிகளில் காக்டஸ் செடியும் ஒன்று. ஏனெனில் இதைப் பராமரிப்பது மிகவும் ஈஸியானது.