ஜெ., தீர்ப்பு - திரையுலகினரின் போராட்டம் துவங்கியது - நடிகர்-நடிகையர் பங்கேற்பு!

சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு, வருத்தம் தெரிவிக்கும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் மவுன உண்ணாவிரத போராட்டம் துவங்கியுள்ளது. சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர், பெப்சி, சின்னத்திரை, திரையரங்கு உரிமையாளர் சங்கம், பி.ஆர்.ஓ., உள்ளிட்ட சங்கங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுக்க தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சரத்குமார், விக்ரமன், கேயார், ஆர்.வி.உதயகுமார், அபிராமி ராமநாதன், சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, ஏ.எல்.அழகப்பன், ஆர்.கே.செல்வமணி, தேவா, மயில்சாமி, ரமேஷ் கண்ணா, பிரவீன் காந்தி, மனோஜ் குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், அஜய் ரத்னம், ஜே.கே.ரித்தீஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், எஸ்.ஜே.சூர்யா, பெப்சி விஜயன், ஷக்தி, சிபிராஜ், நரேன், மன்சூர்அலிகான், ராதாரவி, பிரபு, கலைப்புலி தாணு, கலைப்புலி.ஜி.சேகரன், குண்டு கல்யாணம், ராமராஜன், தியாகு, பி.வாசு, பாக்யராஜ், செந்தில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.
உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.