தேசிங்குராஜா, ஒரு கன்னியும் மூன்று காளையும் படங்களுக்கு பிறகு பிந்து மாதவி நடித்த படங்கள் எதுவுமே திரைக்கு வரவில்லை. அவர் முகத்தை திரையில் பார்த்து நாளாகி விட்டதால், அவரது மார்க்கெட் சரிந்து விட்டதாக பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் இதுபற்றி பிந்து மாதவியைக் கேட்டால், தற்போது கலக்குறே மாப்ளே, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வசந்தகுமாரன், சவாலே சமாளி மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படம் என அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்த படங்கள் திரைககு வரும்போது மீண்டும் என் பெயர் மார்க்கெட்டில் பரவலாக பேசப்படும் என்கிறார் பிந்து மாதவி. மேலும், கழுகு படத்தில் என்னை நடிக்க வைத்த சத்யசிவா, கேடி பில்லா கில்லாடி ரங்காவில் நடிக்க வைத்த பாண்டிராஜ் போன்ற டைரக்டர்களே மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
காரணம், அவர்கள் இருவர் படமும் எனக்கு ஹிட்டாக அமைந்தன. அதனால் நடித்து வரும் படங்களும் வெற்றி பெறும் என்று நம்புவதாக கூறும் பிந்து மாதவி, விஜயசேதுபதியுடன் நடித்து வரும் வசந்தகுமாரன் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். காரணம், அந்த படத்தில் வழக்கம் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறாராம் பிந்து மாதவி.

cinema, vijayasethupathi, bindu mathavi, pandiraj, sathya siva