ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனராக்கிய ரசிகர்கள்!

ஜென்டில்மேன் தொடங்கி இப்போது இயக்கியுள்ள ஐ படம் வரை ஷங்கரின் ஒவ்வொரு படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில்தான் உருவாகியிருக்கிறது. அதில் ஐ படம் 150 கோடி பட்ஜெட. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

அதோடு, படத்தின் ஆடியோ விழாவுக்கு அர்னால்டை வரவைத்து இன்னும் பிரம்மாண்டம் சேர்த்து விட்டார்கள். மேலும், தான் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டிலேயே படம் எடுத்து வருவது பற்றி ஷங்கர் கூறுகையில், எனக்கு பிரம்மாண்ட பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்ற கொள்கையெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால் இன்றைக்கு பல மொழிப்படங்களையும் டி.வியிலேயே மக்கள் பார்த்து விடுகிறார்கள். அதனால் தியேட்டருக்கு வரும்போது ஏற்கனவே பார்த்த படங்களை விட பிரம்மாண்டமாக எதிர்பார்க்கிறார்கள்.


அதனால்தான் அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்து நான் ஒவ்வொரு படத்தையும் பிரம்மாண்டமாக எடுக்கிறேன். மேலும், என்னாலும் சிறிய பட்ஜெட் படங்களை கொடுக்க முடியும். ஆனால் ரசிகர்களே என்னிடம் பிரம்மாண்டத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்களே. அதனால்தான் ரசிகர்களின் விருப்பம் அறிந்து பிரம்மாண்டமாகவே படமெடுத்து வருகிறேன். ஆக, நான் பிரம்மாண்ட இயக்குனராகவே தொடர்ந்து இருப்பதற்கு ரசிகர்களே காரணம் என்கிறார் ஷங்கர்.